உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கிய லாரி திருமங்கலத்தில் திக்...திக்...

ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கிய லாரி திருமங்கலத்தில் திக்...திக்...

திருமங்கலம் : திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே கிராசிங்கில் லாரி கடந்து செல்லும்போது கேட் இறக்கப்பட்டது. எதிர் திசையில் மற்றொரு லாரி இருந்ததால் தண்டவாளத்தில் நின்ற லாரியை நகற்ற இயலவில்லை. இதையடுத்து மீண்டும் கேட் உயர்த்தப்பட்டு லாரிகள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.இப்பகுதியில் ரூ. 54 கோடியில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கனரக வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என பேனர் வைத்ததோடு போலீசார் தங்கள் கடமையை முடித்துக் கொண்டனர். வாகனங்கள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை திருமங்கலம் விமான நிலைய ரோடு மட்டுமல்லாது மதுரை ரோடு, உசிலம்பட்டி ரோடு, விருதுநகர் ரோடு என அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.நேற்று வழக்கம்போல் கனரக லாரிகள் இந்த பாதையை கடந்து செல்வதற்கு முயன்றன. ஏற்கனவே அடைக்கப்பட்டு இருந்த ரயில்வே கிராசிங் கேட் காலை 8:40 மணிக்கு திறக்கப்பட்டது. லாரி தண்டவாளத்தை கடக்கும் முன் மீண்டும் ரயில் வருவதற்கான சிக்னல் வந்ததால் கேட் இறக்கப்பட்டது. பாதி இறக்கப்பட்ட நிலையில் நடுவில் இருந்த லாரியை எதிரில் வந்த மற்றொரு லாரி மறைத்து நின்றதால் வெளியேற முடியாமல் தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பதட்டமடைந்தனர். இதையடுத்து மீண்டும் கேட் திறக்கப்பட்ட பின்னர் லாரிகள் அங்கிருந்து கிளம்பின. போக்குவரத்து போலீசார், மாவட்ட நிர்வாகம் இணைந்து இவ்வழியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கனரக வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை