மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
22-Dec-2024
மதுரை: மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் சென்னை பகவந் நாம பிரச்சார மண்டலி சார்பில் 'மதுரையில் பண்டரிபுரம்' நிகழ்ச்சி மே 28 முதல் ஜூன் 1 வரை நடக்கிறது.மண்டலி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அயோத்யா, பூரி, பத்ரிநாத், துவாரகா, பத்ராஜலம், உடுப்பி, ராமேஸ்வரம், காசி உள்ளிட்ட புண்ணிய தலத்தில் பாகவத நாம சங்கீர்த்தன மேளாவை நடத்துவது வழக்கம். 22 ஆண்டுகளாக நடக்கிறது. இந்த ஆண்டு மே 28 முதல் 5 நாட்கள் மதுரையில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் சண்டிஹோமம், 108 சுவாசினி பூஜை, மீனாட்சி, ருக்மணி திருக்கல்யாண நிகழ்வுகள் நடக்கவுள்ளன. 1008 சாலக்கிராம பூஜை நடக்கிறது.மதுரை டி.வி.எஸ்., நகர் ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடத்தின் சுவாமி ராமானந்த சரஸ்வதி கூறுகையில், ''இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட நாமசங்கீர்த்தன கலைஞர்கள், வேத விற்பன்னர்கள் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சி மேடை பண்டரிபுரம் கோயில் போல் வடிவமைக்கப்படவுள்ளது. பண்டரிபுரம் பாண்டுரெங்கனை பக்தர்கள் தரிசிக்கலாம். 5 நாட்களும் அன்னதானம் நடைபெறும். அனுமதி இலவசம். பிலாஸ்பூர் சச்சிதானந்த சுவாமிகள், வைஷாக் ராமானந்த பாரதி சுவாமிகள், பல்வேறு ஜீயர் சுவாமிகள், ஆதின கர்த்தர்கள் பங்கேற்கின்றனர்'' என்றார்.ஏற்பாடுகளை மண்டலி ஒருங்கிணைப்பாளர் கடலுார் கோபி பாகவதர், தலைவர் சுவாமிநாதன், செயலாளர் சங்கர், பொருளாளர் விஸ்வநாதன், பீடம் நிர்வாகிகள் பரத், சுந்தர், பிரகாஷ், அனுஷத்தின் அனுகிரக நிறுவனர் நெல்லை பாலு செய்கின்றனர்.
22-Dec-2024