பெரியாறு அணைக்கு எதிராக குரல் எழுப்புவோர் காணாமல் போவர்: பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் சாபம்
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே சிறுபட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக் பிறந்தநாள் விழா, சிறுதானிய விழிப்புணர்வு, டில்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, மாநில தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் முத்துவிஸ்வநாதன், துணைச் செயலாளர் நேதாஜி, பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம், 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பெருமாள், சின்னயோசனை, ஒருங்கிணைப்பாளர்கள் காராமணி, தமிழ்செல்வன், ஐந்திணை வேலுச்சாமி, பாரம்பரிய நெல் விவசாயி அலெக்ஸ் பங்கேற்றனர்.அன்வர் பாலசிங்கம் பேசியதாவது: பெரியாறு அணையின் நீரை 5 மாவட்ட த்தினர் குடிநீர், விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர். மேற்கே செல்லும் ஆற்றை கிழக்கே திருப்பிய சாதனையை செய்தவரை நாம் நினைவில் வைத்து 5 தலைமுறையாக கொண்டாடுகிறோம். கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக பெரியாறு அணைக்கு எதிராக குரல் எழுப்பிவரும் கேரள மாநில அரசியல்வாதிகள் காணாமல் போவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். தொடர்ந்து அவரது புகழை பரப்பும் பணியில் ஈடுபடுவோம் என்றார். சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு உள்பட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ராஜேஷ் நன்றி கூறினார்.