உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  இளமனுார் பள்ளியில் முப்பெரும் விழா

 இளமனுார் பள்ளியில் முப்பெரும் விழா

மதுரை: மேலுார் இளமனுார் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா என முப்பெரும் விழா மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் ஆறுமுகம், பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத்தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மகேந்திர பாபு வரவேற்றார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சமூக ஆர்வலர்மதி வெங்கடேஷ் பரிசுவழங்கினார்.தலைமையாசிரியர் கனகலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் முத்துராஜா, தியாகராஜர் கல்லுாரிதமிழ்த்துறைத் தலைவர் காந்திதுரை, ஓய்வு பெற்ற வணிகவரி அலுவலர் பாண்டியராஜா உள்ளிட்டோர் பேசினர். பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவியை'ஆரோ லேப்' நிர்வாகி மகாலட்சுமி திறந்து வைத்தார்.உதவித் தலைமை ஆசிரியர் லஜபதி நன்றி கூறினார்.மாணவிகள் தேவஸ்ரீ, காயத்ரி தேவி தொகுத்து வழங்கினர். ஆண்டார் கொட்டாரம் அரசு உயர்நிலைப்பள்ளிதலைமையாசிரியர் முனியாண்டி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி,மீனாட்சிநகர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் அல்லி முத்து, ஆசிரியர்கள் சங்கரசபாபதி, மணிராமன், மனோகரன், நாகேந்திரன், சுப்ரமணி,பெல்சியா, ராஜவடிவேல், ஜேசுதாஸ், ஜீவநேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ