உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மஞ்சள் அறுவடை பணி தீவிரம்

மஞ்சள் அறுவடை பணி தீவிரம்

பாலமேடு, : அலங்காநல்லுார், பாலமேடு பகுதிகளில் மஞ்சள் கிழங்குகளை பொங்கல் பண்டிகைக்கு விற்க விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.இப்பகுதியில் கிணறு, போர்வெல் பாசனத்தில் அதிகளவு மஞ்சள் பயிரிடப்பட்டு வந்தது. போதிய விலை, அதிக முதலீடு காரணமாக குறைந்த அளவு விவசாயிகள் மட்டுமே மஞ்சள் சாகுபடி செய்திருந்தனர்.எர்ரம்பட்டி விவசாயி பாலசுப்பிரமணி கூறியதாவது: அரை ஏக்கரில் மஞ்சள் சாகுபடிக்கு உழவு, நடவு துவங்கி அறுவடைக்கு தொழிலாளர்கள் என ரூ.ஒரு லட்சம் செலவாகிறது. கடந்தாண்டு உற்பத்தி குறைவு என்பதால் பொங்கலுக்கு அறுவடை செய்த மஞ்சள் மினிவேனில் ஒரு லோடு ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. இதனால் விவசாயிகள் அதிகளவில் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். தற்போது ஒரு லோடு மஞ்சள் ரூ.30 முதல் 35 ஆயிரம் வரை விற்கும் என எதிர்பார்க்கிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை