உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஏ.டி.எம்., மோசடி இருவர் கைது

ஏ.டி.எம்., மோசடி இருவர் கைது

திருப்பரங்குன்றம்: மதுரை அழகப்பன்நகர் பகுதியை சேர்ந்த குமார் பாபு 60, திருப்பரங்குன்றம் அரசு பள்ளி ஆசிரியர். டிச. 20ல் திருப்பரங்குன்றம் பெரியரத வீதியிலுள்ள வங்கி ஏ.டி.எம்.ல்பணம் எடுத்து சென்றார். டிச., 21ல் அவரது கணக்கிலிருந்து ரூ. 35 ஆயிரம் எடுத்ததாக மெசேஜ் வந்தது. அவர் ஏ.டி.எம். கார்டை தேடியபோது காணவில்லை. குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில், குமார்பாபு ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தது திருப்பரங்குன்றம் கீழத்தெரு குப்பையன் கிணற்றுச்சந்து பாலா 23, ஹார்விப்பட்டி பரணி 26, (எம்.பி.ஏ., பட்டதாரி) என தெரிந்தது.அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர். ஏ.டி.எம்., கார்டு கீழே கிடந்ததாகவும், அந்த கார்டில் இருந்த ரகசிய எண்களை வைத்து பணம் எடுத்ததையும் ஒப்புக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை