உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காடாம்பட்டி விலக்கு அருகே கார் விபத்தில் இருவர் பலி

காடாம்பட்டி விலக்கு அருகே கார் விபத்தில் இருவர் பலி

கொட்டாம்பட்டி,: திருநெல்வேலி வண்ணாரபேட்டை ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி கோம்பையா 71. இவர் மனைவி ராமலட்சுமி 53, உறவினர் ராம்சித்தார்த் 5, செல்வி 45, உள்ளிட்டோருடன் சென்னைக்கு உறவினர் வீட்டிற்கு சென்றார்.காரை மகள் ஜெயபிரபா 39, ஓட்டினார். நேற்று காலை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி, காடாம்பட்டி விலக்கு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பாறையில் மோதி கவிழ்ந்தது. இதில் ராமலட்சுமி, ராம்சித்தார்த் இறந்தனர். காயமடைந்த மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி