உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிராமிய கலைஞர்கள் கூட்டம்

கிராமிய கலைஞர்கள் கூட்டம்

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் மறுமலர்ச்சி சங்கம், எழுமலை கிராமிய கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. உசிலம்பட்டி, எழுமலை, பேரையூர் பகுதி கிராமிய கலைஞர்கள், மேளதாரர்கள், நாதஸ்வர, கரகாட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், 58 வயது நிறைவுற்றோருக்கு உதவித்தொகை, இறந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றினர். ராஜேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை