உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உற்ஸவர் சிலையை எடுத்துச் செல்ல கிராமத்தினர் எதிர்ப்பு

உற்ஸவர் சிலையை எடுத்துச் செல்ல கிராமத்தினர் எதிர்ப்பு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வரதராஜ பெருமாள் கோயில் உற்ஸவர் சிலையை எடுத்துச் செல்ல வந்த அறநிலையத்துறை அதிகாரிகளை தடுத்து கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு பழமையான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. ஓராண்டாக புனரமைப்பு பணிகள் நடந்து(ஆக., 28) வியாழக்கிழமை 64 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது. புனரமைப்பு பணிகளின் போது உற்ஸவர் சிலைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைத்து பாதுகாக்கப்பட்டது. தற்போது கும்பாபிஷேகத்திற்காக சிலை கொண்டு வரப்பட்ட நிலையில் போதிய பாதுகாப்பில்லை எனக்கூறி நிர்வாக அலுவலர் இளமதி தலைமையில் சிலையை எடுத்துச் செல்ல அறநிலையத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்களை கிராமத்தினர் தடுத்தனர். உதவி ஆணையர் இளங்கோவன், ஆய்வாளர் ஜெயலட்சுமி, எஸ்.ஐ., கணேஷ்குமார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கோயிலின் பாதுகாப்பிற்கு வலுவான 'கேட்' அமைத்து தரப்படும் என கிராமத்தினர் உறுதியளித்ததையடுத்து சிலை கோயிலிலே இருக்க அனுமதியளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ