| ADDED : நவ 19, 2025 05:22 AM
மதுரை: கப்பலோட்டிய தமிழர் தியாகி வ.உ. சிதம்பரனார் 89ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்தனர். அவனியாபுரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம், திருப்பரங்குன்றம் தொகுதி தலைவர் முருகன், நிர்வாகிகள் இப்ராஹிம், ராமர், பொன்முனியாண்டி, சரவணன், முகமது இஸ்மாயில் ஆகியோர் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் முன்பு சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மரியாதை செலுத்தினர். வ.உ.சி., அறக்கட்டளை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் அருணாசலம், சுகுமார், ராஜசேகரன், சிவராஜன், தமிழரசன் பங்கேற்றனர். தி.மு.க., சார்பில் நகர் செயலாளர் சத்யபிரகாஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சேர்மன் ஜெயராமன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் செந்தில், கருத்தபாண்டி பங்கேற்றனர். அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர் செயலாளர் முருகேசன், முன்னாள் சேர்மன் முருகேசன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ராமச்சந்திரன், மணி, ஜெயபிரகாஷ் பங்கேற்றனர்.