உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதல்வர் அறிவித்த சமச்சீர் தொழில் வளர்ச்சி என்ன ஆனது? முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி

முதல்வர் அறிவித்த சமச்சீர் தொழில் வளர்ச்சி என்ன ஆனது? முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி

திருமங்கலம் : 'உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மதுரையும், தென்மாவட்டங்களும் வஞ்சிக்கப்பட்டு இருப்பதை புள்ளி விவரங்கள்எடுத்துக்காட்டுவது வேதனை அளிக்கிறது' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது: உலக முதலீட்டாளர்கள்மாநாட்டில் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலமாக 15 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 13 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என தி.மு.க., அரசு அறிவித்திருக்கிறது. இதில் பெரும்பாலான முதலீடுகள் வட மாவட்டங்களுக்கான அறிவிப்புகளாகவே இருக்கிறது.முதல்வர் ஸ்டாலின்அறிவித்தபடி தமிழகத்தின் சமச்சீர் தொழில் வளர்ச்சி என்ன ஆனது.தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மதுரை மட்டும் தான் எவ்வித இயற்கை சீற்றங்களுக்கும் ஆட்படாத, தொழில் செய்வதற்கு உகந்த மாவட்டமாக இருக்கிறது. அப்படி இருந்தும் மதுரையில் தொழில் வளர்ச்சிக்கான எவ்வித முயற்சியும் தி.மு.க., அரசு எடுக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் தென்மாவட்டங்களில் தொழில் துவங்க பல்வேறு திட்டங்களை பழனிசாமி அறிவித்தார். தி.மு.க., அரசு தேர்தல்நேரத்தில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிப்பதும், ஆட்சிக்கு வந்தபின் அதை மறந்து விடுவதும் அவர்களுக்கு வாடிக்கையான ஒன்று. மதுரை வளர்ச்சிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !