உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இரண்டு வருஷமாச்சு திறப்பு விழா என்னாச்சு

இரண்டு வருஷமாச்சு திறப்பு விழா என்னாச்சு

மேலுார்: நா.கோவில்பட்டியில் ஆனையப்பன் குளம் பகுதியில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி ரூ. 22 லட்சத்தில் கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. அதனால் மக்கள் பாசன நீரை பருகுவதால் சிறுநீரக பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். பெருமாள்: ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் கண்டு கொள்ளவில்லை. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாக வீணாகி புதர் மண்டி காணப்படுகிறது என்றார். ஊராட்சி செயலாளர் இளையராஜா கூறுகையில், ''போர்வெல் போடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் மேல்நிலைத் தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை