உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை என்ன: உயர்நீதிமன்றம் கேள்வி

விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை என்ன: உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை, : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் உள்ள விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை குமார் 2011ல் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுச் சுவரிலிருந்து 1 கி.மீ., சுற்றளவில் 9 மீ., உயரத்திற்கு மேல், விதிகளை மீறி பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவை கோயில் கோபுரங்களை மறைக்கும் வகையில் உள்ளன. விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: வழக்கறிஞர் கமிஷனர்களை நியமித்து விதிமீறல் கட்டடங்களை அடையாளம் காண ஏற்கனவே இந்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. விதிகளை மீறி 500 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றின் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. அக்கட்டடங்களுக்கு மாநகராட்சி வரி வசூலிக்கிறது.மாநகராட்சி தரப்பு: படிப்படியாக நடவடிக்கை எடுக்க கால அவகாசம் தேவை. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள்: விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் பிப்.7ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி