உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து கோயில் கும்பாபிஷேக பணிகள் துவங்குவது எப்போது

குன்றத்து கோயில் கும்பாபிஷேக பணிகள் துவங்குவது எப்போது

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2011 ஜூன் 6ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் துவங்கவில்லை.கோயில் வளாகத்திலுள்ள லட்சுமி தீர்த்த குளத்தின் உள்புற கற்சுவர் சேதமடைந்து கிடந்தது. அப்பணியை துவக்க அரசின் அனுமதி தாமதமானதால், கும்பாபிஷேக பணியை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அரசு அனுமதி கிடைத்து லட்சுமி தீர்த்த குளம் சீரமைப்பு பணிகள் 6 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. பின்பு அறங்காவலர்கள் நியமனத்திற்காக கும்பாபிஷேக பணிகள் தாமதமாயின.தற்போது அறங்காவலர்களும் பொறுப்பேற்று விட்டனர். ஆனால் கும்பாபிஷேகம் சம்பந்தமான ஆரம்பகட்ட பணிகள்கூட துவங்கவில்லை. சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களான மலை மேல் காசி விஸ்வநாதர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், கீழ ரத வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், மேலரத வீதியிலுள்ள பாம்பலம்மன் கோயில்களுக்கும் கும்பாபிஷேக பணிகளை விரைவில் துவக்க ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை