மேலும் செய்திகள்
ரேஷன் கடை கூரை இடிந்து ஊழியர் படுகாயம்
23-Sep-2025
நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மயிலாடுதுறை காவிரியில் ஆய்வு
22-Sep-2025 | 1
அண்ணன் மனைவியரிடம் தொடர்பு கொழுந்தன் வெட்டிக்கொலை
21-Sep-2025 | 3
மயிலாடுதுறை:தருமபுரம் ஆதீனததை பணம் கேட்டு மிரட்டிய மூவர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீசார் ஆடுதுறை வினோத், ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில், விக்னேஷ், செம்பனார்கோவில் தனியார் பள்ளி தாளாளர் குடியரசு, வக்கீல் ஜெயச்சந்திரன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார், பா.ஜ., மாவட்ட தலைவர் அகோரம், நெய்குப்பை ஸ்ரீநிவாஸ், திருச்சி பிரபாகர் ஆகிய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் விக்னேஷ், வினோத், குடியரசு, சீனிவாஸ் ஆகியோர் பிப்ரவரி மாதமும், அகோரம் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.இந்நிலையில் வழக்கில் கைதான சீனிவாஸ் கடந்த மாதம் ஜாமின் பெற்றார். அதனைத் தொடர்ந்து விக்னேஷ், வினோத், குடியரசு ஆகியோர் ஜாமின் கோரி மயிலாடுதுறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித் மாஜிஸ்திரேட் கலைவாணி, மூவரும் தினமும் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
23-Sep-2025
22-Sep-2025 | 1
21-Sep-2025 | 3