உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / பூம்புகாரில் சுருக்குமடி வலைகள் பறிமுதல் மீனவர்கள் எதிர்ப்பால் பரபரப்பு

பூம்புகாரில் சுருக்குமடி வலைகள் பறிமுதல் மீனவர்கள் எதிர்ப்பால் பரபரப்பு

மயிலாடுதுறை:பூம்புகார் துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் 2 சுருக்கு மடி வலைகளை பறிமுதல் செய்ததற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவ கிராமத்தில் அரசின் தடையை மீறி சுருக்குமடி வலை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தரங்கம்பாடி உள்ளிட்ட மீனவ கிராமத்தினர் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து நேற்று பூம்புகார் துறைமுகத்தில் வைத்திருந்த 2 சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ய நாகை மீன்வளத்துறை இயக்குனர் இளம்பழுதி தலைமையிலான குழுவினர் சென்றனர். அவர்களிடம் பூம்புகார் மீனவர்கள் நாங்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தவில்லை. துறைமுகத்தில் தான் வைத்துள்ளோம். கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் போது அதிகாரிகள் ஆய்வு செய்து அதனை பறிமுதல் செய்து கொள்ளலாம் என்றனர்.அதற்கு அதிகாரிகள் அரசால் தடை செய்யப்பட்ட வலைகள் எங்கு இருந்தாலும் அதனை பறிமுதல் செய்வதற்கு அதிகாரம் உண்டு என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் மீனவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து டி.எஸ்.பி.,க்கள் ராஜ்குமார், லாமேக் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி துறைமுகத்தில் இருந்த 2 சுருக்குமடி வலைகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.இச்சம்பவத்தால் பூம்புகாரில் பதட்டம் நிலவி வருவதை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ