உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / கோவிலில் ஒலிபெருக்கிக்கு தடை: கண்டித்து போராட்டம்

கோவிலில் ஒலிபெருக்கிக்கு தடை: கண்டித்து போராட்டம்

மயிலாடுதுறை:மயிலாடுதுறை சித்தர்காட்டில், திரிபுரசுந்தரி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. அங்கு வந்த ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அதிக சத்தத்தால் இடையூறு ஏற்படுவதாக கூறி, ஒலிபெருக்கியை நிறுத்தியதுடன், கோவில் அர்ச்சகரை தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.மேலும், தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவில் ஒலிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது என, அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதை கண்டித்து, பக்தர்கள் மற்றும் ஹிந்து அமைப்புகளை சார்ந்தோர் நேற்று முன்தினம், ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தாமல் வேறு வகை ஒலிபெருக்கியை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R Kay
ஏப் 26, 2024 02:40

இந்த கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் கட்டுப்பாடு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பொருந்துமா? தீயமுகவிற்கு ஏன் இந்துமதமென்றாலே இவ்வளவு அலர்ஜி?


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை