மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் புதிய அப்டேட்: ஸ்ரீதர் வேம்பு
29-Oct-2025 | 1
நாகை மீனவர்களிடம் கொள்ளை
04-Oct-2025
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
22-Sep-2025
நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
13-Sep-2025
நாகப்பட்டினம்:தமிழகம் - புதுச்சேரி மாநில எல்லையான நாகை மாவட்டம் வாஞ்சூரில் உள்ள சோதனை சாவடியில், நாகை மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றுவர்.நேற்று முன்தினம் இரவு, நாகை, டவுன் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் ஜோதிமணி, வலிவலம் பாலமுருகன் ஆகியோர் பணியில் இருந்தனர்.அப்போது வாஞ்சூரில் இருந்து நாகைக்கு வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். ஆட்டோவில் கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணி இருவர் மது அருந்தி விட்டு, மது பாட்டில்களை இடுப்பில் சொருகி மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இரண்டு போலீஸ்காரர்களும் அவர்களை மிரட்டி பணம் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்ததாக எஸ்.பி., ஹர்ஷ் சிங்கிற்கு தகவல் கிடைத்தது.சோதனைச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்த எஸ்.பி., ஹர்ஷ் சிங், இரு போலீசாரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
29-Oct-2025 | 1
04-Oct-2025
22-Sep-2025
13-Sep-2025