உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மானியத்தில் சோலார் பம்பு செட் பெற விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு

மானியத்தில் சோலார் பம்பு செட் பெற விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்: 'வேளாண்மை பொறியியல் துறை சார்பில், மானியத்தில் வழங்-கப்படும், 'சோலார் பம்பு செட்' பெற, மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக அரசு, மின் வினியோகத்தை குறைக்கவும், இலவச மின் இணைப்பிற்காக காத்திருக்கும் விவசாயிகளின் நலன் காக்கவும், சூரிய ஒளியில் இயங்கும், 'சோலார் பம்பு செட்டு'களை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், 5 ஹெச்.பி., 7.5 ஹெச்.பி., 10 ஹெச்.பி., சோலார் பம்பு செட்டுகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு, குறு விவசாயிகளுக்கு, 70 சதவீதம் மானியத்திலும், இதர விவசா-யிகளுக்கு, 60 சதவீதம் மானியத்திலும் அமைத்து கொடுக்கப்-படும். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசா-யிகள், சிறு, குறு விவசாயிகளாக இருக்கும் பட்சத்தில், 80 சத-வீதம் மானியத்திலும் சோலார் பம்புசெட்டுகள் அமைத்து கொடுக்கப்படும்.எனவே, மானியத்தில் சோலார் பம்பு செட்டுகள் அமைத்துக்-கொள்ள விரும்பும் விவசாயிகள், விண்ணப்பத்துடன் சிட்டா, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன், தங்களது வட்டாரத்திற்கு உட்பட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, சிவில் சப்ளைஸ் கிடங்கு பின்புறம், அண்ணாமலை நகர், திருச்சி சாலை, வசந்தபுரம் மற்றும் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, 2/607, ஆர்.டி.ஓ., அலுவ-லகம் அருகே, வரகூராம்பட்டி, ஆண்டிபாளையம் அஞ்சல், திருச்-செங்கோடு -ஆகிய அலுவலகங்களில் சமர்ப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ