நாமக்கல் : 'பொருட்கள் குறித்த விபரங்கள் அடங்கிய லேபிள் இல்லாமல், விற்பனை செய்த கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகம், நுகர்-வோருக்கு, 3,156 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.நாமக்கல், சேந்தமங்கலம் சாலையை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பராயன், 82. இவர், 2023 அக்.,ல், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதில், 2022 செப்டம்பரில் நாமக்கல், மோகனுார் சாலையில் உள்ள கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டில், ஜவ்வரிசி, 250 கிராம், சோம்பு, 100, சீரகம், 100, பருப்பு, 250, பொட்டுக்கடலை, 500 கிராம் ஆகியவற்றை, 196 ரூபாய் செலுத்தி வாங்கினேன். அவர்கள் வழங்கிய பொட்டலங்களின் மீது எடை, விலை உள்-ளிட்ட விபரங்கள் அடங்கிய லேபிள் ஒட்டவில்லை.இது குறித்து கேட்டபோது, அவர்கள் சரிவர பதில் தரவில்லை. நுகர்வோர் உரிமை பாதிக்கப்பட்டுள்ளதால், 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், 10 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு தொகையும், கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிடத்திருந்தார். 'விபரங்கள் அடங்கிய லேபிள் ஒட்டிய பொட்டலங்களைதான் விற்பனை செய்தோம்' என, கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்-வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிட்டது. விசாரணை முடிவில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்-பினர் ரமோலா ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர்.அதில், 'நுகர்வோர் புகாரை தக்க சாட்சியம் மற்றும் ஆவணங்க-ளுடன் நிரூபித்துள்ளார். நுகர்வோர் வாங்கிய பொட்டல பொருட்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விட்டதால், அதற்-கான, 196 ரூபாய் மற்றும் இழப்பீடாக நுகர்வோர் செலுத்திய தொகையின், பத்து மடங்கு தொகையான, 1,960 ரூபாய், செலவு தொகையாக, 1,000 ரூபாய் என, மொத்தம், 3,156 ரூபாய் கூட்டு-றவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகம், நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.