உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரத்தில் கொட்டிய மழை சாக்கடை வெள்ளத்தால் அவதி

ராசிபுரத்தில் கொட்டிய மழை சாக்கடை வெள்ளத்தால் அவதி

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில், நேற்று காலை வழக்கம் போல் வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. மாலை, 4:00 மணியளவில் திடீரென வானத்தில் மேகம் சூழ்ந்தது. காற்றுடன் கன மழை பெய்ய தொடங்கியது. ஆண்டகலுார் கேட், முத்துக்காளிப்பட்டி, கவுண்-டம்பாளையம், அணைப்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில், ஒரு மணிநேரம் மழை கொட்டி தீர்த்-தது. ராசிபுரம் பகுதியில் சாலையெங்கும் மழைநீர் தேங்கியது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ராசிபுரத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில், மழைநீருடன் சாக்கடையும் கலந்து சாலையில் வெள்ளம்போல் சென்றது. இதனால், பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் அவ-திப்பட்டனர். இரண்டு மணிநேரத்திற்கு பின் மழைநீர் வடிந்த பிறகு தான் வெளியே வந்தனர். நாமகிரிப்பேட்டை, அரியாக-வுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதியில் காற்றுடன் லேசான மழை பெய்தது. பின், விட்டு விட்டு துாறல் மழையாக இரவு வரை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை