மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
சேந்தமங்கலம் : முத்துக்காப்பட்டி அருகே, ஒட்டடி பெரியசாமி கோவிலுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.சேந்தமங்கலம் அருகே கொல்லிமலை அடிவாரத்தில், பிரசித்தி பெற்ற ஒட்டடி பெரியசாமி கோவில் உள்ளது. ஏராளமான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு நேர்த்திக்கடனாக ஆடு, கோழி பலியிட்டு செல்கின்றனர். அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை-களில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த கோவில் முத்துக்காப்பட்டியில் இருந்து, 5 கி.மீ., தொலையில் கொல்லி-மலை அடிவாரத்தில் உள்ளதால், பக்தர்களின் வசதிக்காக நாமக்கல், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.ஏராளமானோர் பயன-டைந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கோவிலுக்கு செல்லும் அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், தினமும் ஏராளமான பக்-தர்கள் குழந்தைகளுடன் முத்துக்காப்பட்டி பைபாஸ் மெயின் ரோட்டில் இருந்து. 4 கி.மீ., துாரம் நடந்து செல்லும் நிலை உள்-ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுவ-துடன், பெண்கள் மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே, நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025