உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெள்ளத்தில் சிக்கிய வாலிபர் மீனவர்கள் உதவியுடன் மீட்பு

வெள்ளத்தில் சிக்கிய வாலிபர் மீனவர்கள் உதவியுடன் மீட்பு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, நாட்டாகவுண்டம்பாளையம் பகு-தியை சேர்ந்தவர் சதாசிவம், 38; இவர், நேற்று மாலை, 6:00 மணிக்கு ஆற்றில் இறங்கி உள்ளார். அப்போது வெள்ளப்பெ-ருக்கில் சிக்கி அடித்து செல்லப்பட்டார். இதனை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, வெப்படை தீயணைப்பு வீரர், ஜனதா நகர் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த மற்-றொரு தீயணைப்பு வீரருக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தார்.உடனடியாக, தீயணைப்பு வீரர்கள் மற்றும் அங்கிருந்த உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் பரிசலில் ஆற்றுப்பகுதிக்கு சென்றனர். அங்கு தத்தளித்துக்கொண்டிருந்த சதாசிவத்தை மீட்டு, பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர். பின், பள்ளிப்பாளையம் அரசு மருத்-துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சதாசிவத்திற்கு நீச்சல் தெரிந்ததால், 2 கி.மீ., துாரம் ஆற்றில் தத்தளித்தபடியே வந்-துள்ளார். நீச்சல் தெரியாதவர்கள் சிக்கியிருந்தால் உயிர்சேதம் ஏற்-பட்டிருக்கும் என, மீனவர்கள், தீயணைப்பு வீரர்கள் தெரிவித்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ