உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தெருமுனை பிரச்சார கூட்டம்

தெருமுனை பிரச்சார கூட்டம்

ராசிபுரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வலியுறுத்தி, ராசிபுரத்தில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் அங்கமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிவேல் பங்கேற்று பேசினார். கூட்டத்தில், இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண, அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷம் எழுப்பப்பட்டது. மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் தாமரைச்செல்வன், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர் முருகேசன், நகர செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ