உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலை அடிவார பகுதியில் தேங்காய் பருப்பு வரத்து அதிகரிப்பு

கொல்லிமலை அடிவார பகுதியில் தேங்காய் பருப்பு வரத்து அதிகரிப்பு

சேந்தமங்கலம், ஆக. 22-கொல்லிமலை அடிவார பகுதிகளான சேந்தமங்கலம், எருமப்பட்டி, காளப்பநாய்க்கன்பட்டி பகுதிகளில், விவசாயிகள் நெல், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் பயரிட்டு வந்தனர். ஆனால், கூலியாட்கள் பற்றாக்குறை, போதிய வருமானம் இல்லாததால், தென்னை மரங்கள் வைத்து பராமரித்து வருகின்றனர். குத்தகைக்கு விடப்பட்டு, ஆண்டுக்கு மூன்று முறை தேங்காய் அறுவடை பணி நடக்கிறது. தற்போது, விளைந்த தேங்காய்களை பறித்து தேங்காய் பருப்புகளாக காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து, தேங்காய் வியாபாரிகள் கூறியதாவது:இப்பகுதியில் உள்ள தென்னை மரங்களை, ஆண்டுக்கு ஒரு மரத்திற்கு, 1,300 ரூபாய் வீதம் பணம் கொடுத்து குத்தகைக்கு எடுத்துள்ளோம். கடந்தாண்டு போதிய மழை இல்லாததால் தேங்காய் விளைச்சல் குறைந்தது. தற்போது, நல்ல மழை பெய்துள்ளதால் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. அதனை பறித்து, தேங்காய் பருப்பாக காயவைத்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ