உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆனி மாத கடைசி முகூர்த்தம் மல்லிகை பூக்கள் விலை உயர்வு

ஆனி மாத கடைசி முகூர்த்தம் மல்லிகை பூக்கள் விலை உயர்வு

எருமப்பட்டி,எருமப்பட்டி யூனியனில், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், போடிநாய்க்கன்பட்டி, கஸ்தூரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குண்டு மல்லிகை பூக்கள் பயிரிட்டுள்ளனர். கடந்த மாதம் இந்த பகுதியில் நல்ல மழை பெய்து தற்போது வெயில் அடிப்பதால், இங்குள்ள மல்லிகை பூ செடிகளில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இந்த பூக்களை விவசாயிகள் நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பூ மார்க்கெட்டுகளில் நடக்கும் ஏலத்திற்கு அனுப்பி வந்த நிலையில், பூக்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. இதனால், முகூர்த்த நாட்களை தவிர மற்ற நாட்களில், விவசாயிகள் பூக்களை வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலைக்கு அனுப்பி வந்தனர்.ஆனால், நேற்று ஆனி மாத கடைசி முகூர்த்தம் என்பதால், பூக்கள் தேவை அதிகரித்து கிலோ குண்டுமல்லி, 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை