உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 15 நாளாக கிணற்றில் தவித்த நாய் மீட்பு

15 நாளாக கிணற்றில் தவித்த நாய் மீட்பு

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பச்சுடையாம்பாளையத்தை சேர்ந்த நடேசன் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இவரது நிலத்தை அதே பகுதியை சேர்ந்த பாலு, 48, என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். பாலு தனது விவசாய தோட்டத்திற்கு பாதுகாப்பாக, ராக்கி என்ற நாயை வளர்த்து வருகிறார். கடந்த, 15 நாட்களுக்கு முன்பு நாய் வெளியே சென்ற நிலையில் திரும்பி வீட்டிற்கு வரவில்லை.நேற்று காலை பாலு தனது விவசாய பணிக்கு சென்றபோது பாழடைந்த கிணற்றிலிருந்து, நாயின் சத்தம் கேட்டது. ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பலகாரராமசாமி தலைமையிலான வீரர்கள், கிணற்றில் இருந்த மரங்களை அகற்றிவிட்டு நாயை மீட்டனர். 15 நாட்களுக்கு பிறகு மேலே வந்த நாய் தனது உரிமையாளரை கண்டதும் தாவி அணைத்துக் கொண்டது. பசியுடன் வந்த நாய்க்கு உணவு அளித்தனர். நாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை, அப்பகுதி மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்