நாமக்கல், நாமக்கல் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை;சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், 219-வது நினைவு நாள் அரசு விழாவிற்கு நாமக்கல் மாவட்டத்திலிருந்து அதிகப்படியான பொதுமக்கள், ஈரோடு மாவட்டம், ஓடாநிலை மற்றும் சேலம் மாவட்டம், சங்ககிரி தீரன் சின்னமலை மணி மண்டபம் ஆகிய இடங்களுக்கு சென்று மரியாதை செலுத்த செல்வர். விழாவில் கலந்து கொள்ள இருக்கும் பொதுமக்கள், கட்சியினர், பிற அமைப்பினர் தாங்கள் செல்லும் வாகனம், கலந்து கொள்பவர்களின் விவரம் மற்றும் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட வழித்தடங்களை தெரிந்து கொண்டு அவற்றை, தங்கள் எல்லைக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் முறையாக தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.நாமக்கல் தாலுகாவில் இருந்து செல்பவர்கள் திருச்செங்கோடு சாலை வழியாக கோஸ்டல் ரெசிடென்சி சந்திப்பு, வேலகவுண்டம்பட்டி, மாணிக்கம்பாளையம், திருச்செங்கோடு, பால்மடை வழியாக செல்ல வேண்டும். கொக்கராயன்பேட்டையிருந்து செல்பவர்கள் விட்டம்பாளையம், வாலரைகேட், திருச்செங்கோடு, பால்மடை வழியாக மட்டுமே செல்ல வேண்டும். சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் மரியாதை செலுத்திவிட்டு, ஈரோடு ஓடாநிலைக்கு செல்பவர்கள் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக, கவுண்டனுார், பச்சாம்பாளையம், பல்லக்காபாளையம், கோட்டைமேடு, குமாரபாளையம் காவேரி ஆற்றுபாலம் வழியாக மட்டுமே செல்ல வேண்டும். பேனர், கட்சி கொடிகள் வைக்க அனுமதியில்லை போதை பொருட்களையோ, ஆயுதங்களையோ கொண்டு செல்லக்கூடாது. விழாவிற்கு செல்பவர்களை கண்காணிக்க, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.