| ADDED : ஜூலை 07, 2024 01:05 AM
ராசிபுரம் : நாமக்கல், கதிராநல்லுாரை சேர்ந்தவர் கோபால், 37. இவர், ஆண்டகலுார் கேட் பகுதியில் கார் சர்வீஸ் சென்டர் வைத்-துள்ளார். கடந்த மாதம், இவர் பட்டறையில் இருந்த, 5 பேட்ட-ரிகள் திருடு போயின. இதுகுறித்து, கோபால் கொடுத்த புகார்படி, ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நி-லையில், நேற்று ராசிபுரம் போலீசார் ஆண்டகலுார் கேட் பகு-தியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டூவீ-லரில் வந்த வாலிபர்கள், 2 பேர் போலீசை பார்த்ததும் தப்பித்து ஓட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால், ராசிபுரம் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், தர்மபுரி மாவட்டம் பைசுஹள்ளி ராமன் கொட்டாயை சேர்ந்த மாணிக்கம் மகன் சங்கர், 26, சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பாலு மகன் தர்மராஜ், 25, என்பதும், இருவரும், கோபால் பட்டறையில், 5 பேட்டரியை திருடி சென்றதும் தெரிந்-தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.