உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.4.83 லட்சத்தில் நலத்திட்டம்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.4.83 லட்சத்தில் நலத்திட்டம்

நாமக்கல் : கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 49 பயனாளிகளுக்கு, 4.83 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை, கல்வி உதவித்-தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்-ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 549 மனுக்கள் வரப்பெற்றன.அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், சமூக பொறுப்பு நிதியில் இருந்து, கல்லுாரி பயில, தலா, 30,000 வீதம், 2 பேருக்கு, 60,000 ரூபாய் உதவித்தொகை, மாண-வருக்கு, 10,000 ரூபாய் உதவித்தொகை, கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்கள், 18 பேருக்கு, 1.32 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.மேலும், 2019 நவ., 29ல், நீரில் மூழ்கி உயிரிழந்த, திருச்செங்-கோடு தாலுகா, முத்தனம்பாளையத்தை சேர்ந்த பிரேம்குமார் குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதி, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 1.80 லட்சம் ரூபாய் மதிப்பில், 27 பேருக்கு, செயற்கை கால், சிறப்பு சக்கர நாற்காலி, கைதாங்கி, ப்ரெய்லி கருவி உள்-பட, மொத்தம், 49 பேருக்கு, 4.83 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.டி.ஆர்.ஓ., சுமன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், ஆர்.டி.ஓ., சுகந்தி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி