மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
05-Oct-2025
அதிக விலைக்கு மது விற்றவர் கைது
05-Oct-2025
பள்ளிப்பாளையம் : சவுதாபுரம் பகுதியில், பஞ்சாயத்து சார்பில் வளர்க்கப்பட்டு வந்த, 140 மரக்கன்றுகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட சவுதாபுரம் மேட்டுக்காடு என்ற இடத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் மூன்று ஆண்டுக்கு முன்பு, சவுதாபுரம் பஞ்., சார்பில், சாத்துக்குடி, எலுமிச்சை, கொய்யா, ஆரஞ்சு, மாதுளை, சப்போட்டா, பலா, மா என, 200 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.பஞ்., சார்பில் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றப்பட்டது. அனைத்தும் நன்கு வளர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், நல்ல வளர்ச்சி அடைந்த, 140 மரக்கன்றுகளை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர்.இது குறித்து பஞ்., தலைவர் ஜெயந்தி நந்தகோபாலன், 'மரங்களை வெட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாயத்து முழுவதும், 5,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது' என, நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். வெப்படை போலீசார், பள்ளிப்பாளையம் யூனியன் அதிகாரிகள் நேரில் சென்று, வெட்டி சாய்க்கப்பட்ட மரக்கன்றுகளை பார்வையிட்டு விசாரணை செய்தனர்.
05-Oct-2025
05-Oct-2025