உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பலத்த காற்றுக்கு சாய்ந்த மரம்

பலத்த காற்றுக்கு சாய்ந்த மரம்

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, ஆனங்கூர் சாலை கோட்டைமேடு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே, 100 ஆண்டு பழமையான மரம் உள்ளது. நேற்று மாலை, 3:00 மணிக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பழமையான அந்த மரம், அருகில் உள்ள கோவில் மீது சாய்ந்தது. கோவிலின் முகப்பில் உள்ள மாரியம்மன் சிலை மீது படும்படி, கிளைகள் சாய்ந்து இருந்ததால், உடனே அகற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வருவாய்த்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து கவுன்சிலர் தனசேகரன் கூறுகையில், ''100 ஆண்டு பழமையான மரம், பலத்த காற்று வீசியதால் கோவில் முகப்பில் உள்ள மாரியம்மன் சிலை மீது படும் படியாக மரம் சாய்ந்தது. நல்லவேளையாக யாரும் அந்த இடத்தில் இல்லாததால், யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை