மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
100 நாள் வேலை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
08-Oct-2025
ராசிபுரம், ராசிபுரம் அருகே அடுத்தடுத்து, ஆறு கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடி சென்றுள்ளனர். ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டுவேல், 45. இவருக்கு சொந்தமான எஸ்.எஸ்., காம்ப்ளக்ஸில் டீக்கடை, லாரி புக்கிங் ஆபீஸ், மளிகை கடை உள்ளிட்ட ஆறு கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கடைகளை பூட்டி விட்டு அனைவரும் வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை டீக்கடை உரிமையாளர் செல்லமுத்து கடையை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது ஆறு கடைகளின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். விசாரணையின் போது ஒரு கடையில், 2,000 ரூபாய், கால் பவுன் தங்க நகை வைத்திருந்ததாகவும், டீக்கடையில், 24 ஆயிரம் ரூபாய் திருட்டு போனதாகவும் தெரிவித்தனர். அருகாமையில் உள்ள விநாயகர் கோவில் பூட்டையும் உடைத்தது விசாரணையில் தெரிந்தது. அருகில் உள்ள 'சிசிடிவி' கேமாராக்கள் மூலம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025