| ADDED : ஜூன் 15, 2024 07:19 AM
நாமக்கல் : நாமக்கல் அரசு பள்ளி மாணவர்களுக்கு, குழந்தை திருமணம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் (பொ) ராமு தலைமை வகித்தார். அதில், பத்தாவது, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, 'பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம், குழந்தை திருமணம், போக்சோ சட்டம்--2012, தமிழ் புதல்வன் திட்டம், கல்வியின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட மகளிர் அதிகாரம் மைய, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.மேலும், போதைப்பொருள் பயன்பாடு, அதனால் ஏற்படும் விளைவுகள், குழந்தை திருமண தடைச்சட்டம்- 2006, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான அவசர உதவி எண், 1098, 181 ஆகியவை குறித்து ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி வித்யா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.தொடர்ந்து, குழந்தை திருமணம் தடுப்பது குறித்த உறுதிமொழி ஏற்றனர்.