உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பணத்தை கேட்டபோது தகராறு: வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

பணத்தை கேட்டபோது தகராறு: வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

நாமகிரிப்பேட்டை: கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகராறில், வாலிபரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மங்களபுரம் அடுத்த ஒண்டிக்கடையை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் விஜயகுமார், 26. இவருடைய நண்பர் சீனிவாசன், 26. இவர், ஒண்டிக்கடையை சேர்ந்த கணேசன் மகன் ரகுபதி, 25, செல்வம் மகன் பரமேஸ்வரன், 22, ஆகியோரிடம், 1.5 லட்சம் ரூபாய் பணம் கடன் வாங்கியுள்ளார். பின், வாங்கிய பணத்தை திருப்பி தர கேட்டு வந்தனர். சீனிவாசன் போன் எடுக்காததால், விஜயகுமாரிடம் விசாரித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், ரகுபதி, பரமேஸ்வரன் ஆகிய இருவரும் விஜயகுமாரை தாக்கினர். இதில் படுகாயமடைந்த விஜயகுமார், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மங்களபுரம் போலீசார், ரகுபதி, பரமேஸ்வரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி