உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மத்திய அரசு நிதியுதவியுடன் தொழில் தொடங்க பயிற்சி

மத்திய அரசு நிதியுதவியுடன் தொழில் தொடங்க பயிற்சி

நாமக்கல்:'மத்திய அரசு நிதியுதவியுடன் தொழில் தொடங்க பயிற்சி வழங்கப்படுகிறது' என, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:சர்வதேச சிறு, குறு நடுத்தர தினத்தை முன்னிட்டு, மத்திய அரசின் தேசியவள அமைப்பான அகமதாபாத்தை சேர்ந்த இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், வரும், 26ல் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்லுாரி வளாகத்தில், 'நீங்களும் தொழில் தொடங்கலாம்' என்ற தலைப்பில் வழிகாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.நாமக்கல் மாவட்டதில், தொழில் முனைவோராக விருப்பமுள்ள சாதாரண கிராமப்புற மகளிர், மகளிர் சுயஉதவி குழுக்கள், படித்து தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்துகொண்டு, பல்வேறு லாபகரமான தொழில் வாய்ப்புகள், தொழில் தொடங்க தேவையான தொழில்நுட்பம், வீட்டிலிருந்து செய்யக்கூடிய தொழில்கள், உணவு பொருட்கள் பதப்படுத்துதல் தொழில்வாய்ப்பு, தொழில் தொடங்க தேவையான வங்கிக்கடன், சந்தை வாய்ப்புகள், 25 சதவீதம் முதல், 35 சதவீதம் வரை அரசு மானியங்கள் குறித்து பல்வேறு துறை நிபுணர்கள் மூலம் விளக்கமளிக்கப்படுகிறது. இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு, சணல் பொருட்களிலிருந்து தயாரிக்கக்கூடிய பல்வேறு பொருட்கள் குறித்த ஒரு மாதகால இலவச பயிற்சிக்கான விண்ணப்பங்களும் நிகழ்ச்சியில் வழங்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி