உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொலை முயற்சி வழக்கில் விவசாயி கைது

கொலை முயற்சி வழக்கில் விவசாயி கைது

கொல்லிமலை, கொல்லிமலை வளப்பூர்நாடு, ஓடக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி மகன் சிவக்குமார், 40. இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ராஜூ மகன் ராமசாமிக்கும் குடும்ப தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம், ஊர் கவுண்டர் விஜயகுமார் வீட்டில் நடந்த விருந்தில் சிவக்குமார் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, ராமசாமி வந்து தகராறு செய்ததுடன் தான் மறைத்து வைத்திருந்த கொடுவாளால் கழுத்தில் வெட்டியுள்ளார். காயமடைந்த சிவக்குமார் செம்மேடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.வாழவந்திநாடு போலீசார் வழக்கு பதிந்து, ராமசாமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை