உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஹோட்டல், ரெஸ்டாரன்ட்களில் உணவு பாதுகாப்புதுறை சோதனை

ஹோட்டல், ரெஸ்டாரன்ட்களில் உணவு பாதுகாப்புதுறை சோதனை

ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரில் உள்ள ரெஸ்டாரன்ட், ஹோட்டல், தாபாக்களில் தரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் உத்தரவுப்படி, ப.வேலுார் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் குழுவினருடன், நேற்று தாபா, ரெஸ்டாரன்ட், ஹோட்டல்களில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, ஹோட்டலில் வைத்திருந்த இறைச்சி, சமையல் எண்ணெய் மற்றும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். உணவு பொருட்கள் தயாரிக்க, தரமற்ற பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், சமையல் அறைகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுரை வழங்கினர். இந்த சோதனையில், ஒரு ஹோட்டலுக்கு, 1,000 ரூபாய் அபராதம், ஏழு ஹோட்டல்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி