உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஹெச்.எம்., பதவி உயர்வு கவுன்சிலிங்கிற்கு பின் முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு நடத்த கோரிக்கை

ஹெச்.எம்., பதவி உயர்வு கவுன்சிலிங்கிற்கு பின் முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு நடத்த கோரிக்கை

நாமக்கல்: 'மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு முன், முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழக அரசு பள்ளி கல்வித்துறை, 2024-25ம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை, முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு என்பது காலங்காலமாக மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு முடிந்த மறுநாள் நடத்தப்பட்டு வருகிறது.ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள செயல்முறைகளில், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பற்றிய செய்திகள் குறிப்பிடவில்லை.கடந்த மூன்று ஆண்டுகளாக, முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன், மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தவில்லை.தமிழகம் முழுதும், 450-க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில், தலைமையாசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை, முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன் விரைந்து நடத்த வேண்டும்.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வை, வரும், 26ல் நடத்தி, அதற்கு பின், முதுகலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தி, தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த முதுகலை ஆசிரியர்களிடையே உள்ள அதிருப்தியை, அதிர்ச்சியை நீக்கி, நடப்பு கல்வி ஆண்டு சிறப்பாக தொடங்குவதற்கான அடித்தளம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி