| ADDED : ஜூன் 04, 2024 04:09 AM
ராசிபுரம்: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 101-வது பிறந்தநாளையொட்டி, ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு இலவச சேலை, அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார். நகர செயலாளர் சங்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இளைஞரணி சார்பில், 'அணைக்கும் கரங்கள்' காப்பகத்தில் உள்ள, மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், நகராட்சி சேர்மன் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், நாமக்கல், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்துார், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, மல்லசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில், கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.