உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல், மோகனுார் பெருமாள் கோவிலில் கோலாகல தேர் திருவிழா

நாமக்கல், மோகனுார் பெருமாள் கோவிலில் கோலாகல தேர் திருவிழா

மோகனுார்:மோகனுார் கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில், 'கோவிந்தா' கோஷத்துடன் திருத்தேர் வீதி உலா கோலாகலமாக நடந்தது.நாமக்கல் மாவட்டம், மோகனுார் காவிரி ஆற்றின் வடகரையில் கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, சுவாமி, பத்மாவதி தாயாருடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், தேர்த்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.அதன்படி, இந்தாண்டு விழா, ஜூலை, 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, பல்லக்கு புறப்பாடு, ஸ்நபன திருமஞ்சனம், மாலையில் ஹனுமந்த, பெரிய திருவடி கருடசேவை, சேஷ, யானை, இந்த்ர விமானம், குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று காலை, 5:15 மணிக்கு, சுவாமி ரதம் ஏறினார். காலை, 9:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என, பக்தி கோஷம் எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், கோவிலில் நிலை நிறுத்தப்பட்டது. வழியில், பக்தர்கள் தேங்காய் உடைத்து, சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை, ஸ்நபன திருமஞ்சனம், இரவு, திருக்கொடி இறக்குதல் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை