உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா

முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா

பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றோரத்தில் பழமைவாய்ந்த சரவணகிரி அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முருகன் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா, கடந்த, மூன்று நாட்களுக்கு முன், அர்ச்சகர் சிவஸ்ரீ செந்தில்நாத சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க, ஹோமம், சிறப்பு யாகத்துடன் துவக்கப்பட்டது. நேற்று காலை, 10:00 மணி முதல், 11:00 மணி வரை கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பள்ளிப்பாளையம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை