உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மினி மாரத்தான் போட்டி சிறுவர், சிறுமியர் பங்கேற்பு

மினி மாரத்தான் போட்டி சிறுவர், சிறுமியர் பங்கேற்பு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், அகரன் விளையாட்டு அமைப்பு சார்பில், ஜூனியர் மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில், 7 முதல், 15 வயது வரை, 900க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர். மாரத்தான் போட்டி ஆனங்கூர் பிரிவில் தொடங்கி கத்தேரி, காந்தி சிலை என, 5 கி.மீ., துாரம் வரை சென்று, மீண்டும் ஆனங்கூர் பிரிவில் நிறைவடைந்தது. குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விஜய்கண்ணன் பதக்கம், சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினார். அமைப்பாளர் பிரதீப் ராஜகோபால், ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுகன் மற்றும் கவுன்சிலர் ராஜ், விளையாட்டு ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை