உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காலி பணியிடங்களை நிரப்ப சத்துணவு பணியாளர் கோரிக்கை

காலி பணியிடங்களை நிரப்ப சத்துணவு பணியாளர் கோரிக்கை

ப.வேலுார், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணி-யிடங்களை நிரப்பக்கோரி, தமிழ்நாடு சத்துணவு பணியாளர் முன்-னேற்ற சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு சத்துணவு பணியாளர் முன்னேற்ற சங்க கூட்டம், பொத்தனுாரில் உள்ள சங்க அலுவலகத்தில் மாநில தலைவர் முருகன் தலைமையில், நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்-றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் ஆகியோருக்கு, கடந்த, எட்டு மாதமாக கால தாமதமாக ஓய்வூ-தியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே கால தாமதம் செய்-யாமல், மாதத்தின் கடைசி நாளில் வழங்க வேண்டும். சத்துணவு மையம், அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்-களை நிரப்பாததால், ஒரு அமைப்பாளர், மூன்று சத்துணவு மையங்கள் பொறுப்பேற்று நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பணியாளர்களின் நலன் கருதி காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை