மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
திருச்செங்கோடு, திருச்செங்கோடு நகராட்சி, கைலாசம்பாளையம் பகுதியில், 1857ல் பாப்பாத்தி என்ற பெண், அர்த்தநாரீஸ்வரர் தேவஸ்தானத்திற்கு, 4.67 ஏக்கர் நிலம் வழங்கினார். இந்த நிலத்தின் இன்றைய மதிப்பு, 100 கோடி ரூபாய். இந்நிலையில் கோர்ட் உத்தரவு உள்ளது எனக்கூறி, டி.ஏ.பி.சி.எம்.எஸ்., தரப்பு நிலத்தை அளவீடு செய்ய வந்தது. அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் ரமணிகாந்தன், எங்கள் நிர்வாகத்தில் உள்ள இடத்தை, எங்களுக்கு தெரிவிக்காமல் அளவீடு செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.இவர்களுடன், 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.ஏ.பி.எம்.எஸ்-., நிர்வாகத்தில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் கடையை திறக்காமல், நில அளவீடு பகுதிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு டி.எஸ்.பி., இமயவரம்பன், தாசில்தார் விஜயகாந்த் ஆகிய இருவரும், பேச்சுவார்த்தைக்கு பின் சுமுகமான தீர்வு எட்டப்படும் என, தெரிவித்ததை அடுத்து, இரண்டு தரப்பினரும் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025