நாமக்கல்: மக்கள் குறைதீர் கூட்டத்தில், 17 பயனாளிகளுக்கு, 5.30 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் உமா வழங்கினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். இதில், 571 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 14 பேருக்கு செயற்கை கால், தாங்கு கட்டை, காதொலிக்கருவி, மடக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டன. 2022 ஜூலை, 22ல், மின்சாரம் தாக்கி உயிரிழந்த, இருவரின் வாரிசுதாரர்கள். 2021 ஜன., 11ல், நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் வாரிசு ஆகியோருக்கு தலா, ஒரு லட்சம் வீதம், மூன்று லட்சம் ரூபாய், முதல்வரின் பொது நிவராண தொகை என, மொத்தம், 17 பயனாளிகளுக்கு, 5 லட்சத்து, 30,450 ரூபாய் வழங்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 2022ம் ஆண்டுக்கு, 'தமிழ் செம்மல்' விருது பெற்ற நுாலாசிரியர் பரணிராஜா, கலெக்டர் உமாவிடம் விருதை காண்பித்து வாழ்த்து பெற்றார்.டி.ஆர்.ஓ., சுமன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.