உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பொன்காளியம்மன், மாரியம்மன் கோவில் விழா; அமைதி பேச்சு வார்த்தையில் தீர்வு

பொன்காளியம்மன், மாரியம்மன் கோவில் விழா; அமைதி பேச்சு வார்த்தையில் தீர்வு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்துள்ள முஞ்சனுார் பொன்காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக, ஆர்.டி.ஓ., சுகந்தி தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதுதிருச்செங்கோடு அடுத்துள்ள முஞ்சனுார் பொன்காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக, இரு தரப்பினருக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறு-பாட்டை தொடர்ந்து, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி தலை-மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், ஹிந்து சமய அற-நிலையத்துறை மற்றும் இரு-தரப்பினரும் இணைந்து போலீஸ் பாதுகாப்புடன் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்படுவதா-கவும், ஜூலை 25 முதல் ஆக., 9ம் தேதிக்குள் விழா நடத்திக் கொள்ளலாம் என ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.இதையடுத்து இரு தரப்பினரும் அமைதியாக கலைந்து சென்-றனர். திருவிழா நடத்துவதில் இருந்த பரபரப்பான சூழ்நிலை மாறி, அமைதியான சூழ்நிலை ஏற்பட்டது. அமைதி பேச்சு வார்த்-தையில் திருச்செங்கோடு டி.எஸ்.பி., இமயவரம்பன், எலச்சிபா-ளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஹிந்து சமய அறநிலையத்-துறை ஆய்வாளர் வடிவுக்கரசி மற்றும் வருவாய் துறை அலுவ-லர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை