உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 3 சதவீதம் கூலி உயர்வு வழங்க விசைத்தறி தொழிலாளர் வலியுறுத்தல்

3 சதவீதம் கூலி உயர்வு வழங்க விசைத்தறி தொழிலாளர் வலியுறுத்தல்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில், விசைத்தறி தொழிலில், 30,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்தி, சதவீத அடிப்படையில் கூலி உயர்வு வழங்கப்படுகிறது. கடந்தாண்டு ஒப்பந்தத்தில், 2023 ஜூன், 1 முதல் 2024 மே, 31 வரை, 7 சதவீதமும், 2024 ஜூன், 1முதல், 2025 மே, 31 வரை, 3 சதவீதமும் வழங்கப்படும் என, முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போது, 3 சதவீதம் கூலி உயர்வை விசைத்தறி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அசோகன் கூறுகையில், ''ஒப்பந்தப்படி தற்போது, 3 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். இந்த கூலி உயர்வை வழங்க கோரி, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரியும், சங்கம் சார்பில் காவிரி, ஆவத்திபாளையம், ஆயக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை