| ADDED : ஜூலை 12, 2024 01:11 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டார விசைத்தறி தொழிலாளர்கள், கூலி உயர்வு, 3 சதவீதம் கட்டாயம் வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் விசைத்தறி தொழிலில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் பேச்சு வார்த்தை நடத்தி, சதவீத அடிப்படையில் கூலி உயர்வு வழங்கப்படுகிறது.கடந்தாண்டு மே மாதம் பள்ளிப்பாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம், விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் இடையே பேச்சு வார்த்தை நடத்தி, விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், 1.6.2023 முதல் 31.5.24 வரை 7 சதவீதமும், 1.6.2024 முதல் 31.5.25 வரை, 3 சதவீதமும் வழங்கப்படும் என ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது. ஒப்பந்தம் அடிப்படையில் தற்போது, 3 சதவீதம் கூலி உயர்வை உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என, விசைத்தறி தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து விசைத்தறி தொழிலாளர்கள் கூறியதாவது; பள்ளிப்பாளையம் வட்டார விசைத்தறி தொழிலாளர்களுக்கு போடப்பட்ட, 10 சதவீதம் கூலி உயர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 1.6.24 முதல் 31.5.25 வரை 3 சதவீதம் கூலி உயர்வை, விசைத்தறி உரிமையாளமர்கள் உடனடியாக வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு கூலி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.