உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தியாகி வரதராஜூலு நாயுடுவிற்கு அஞ்சல் தலை வெளியிட கோரிக்கை

தியாகி வரதராஜூலு நாயுடுவிற்கு அஞ்சல் தலை வெளியிட கோரிக்கை

நாமக்கல்: விடுதலை களம் கட்சி நிறுவன தலைவர் நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கத்தை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ராசிபுரத்தை சேர்ந்தவர் சுதந்திர போராட்ட தியாகி டாக்டர் வரதராஜூலு நாயுடு. இவர், தேச தலைவர்களுடன் இணைந்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார். சிறந்த பத்திரிகையாளர். தன் சொத்துகளை தானமாக வழங்கியவர். காங்., கட்சி, இந்து மகா சபை உள்ளிட்ட அமைப்புகளிலும் பொறுப்பு வகித்துள்ளார். சென்னை மாகாணத்தின் சட்டசபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். தமிழக அரசு, அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில், அவருக்கு சிலை அமைக்க வேண்டும். மணி மண்டபம் கட்ட வேண்டும். மத்திய அரசு தபால் தலை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன், இளைஞரணி தலைவர் பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ